பாகிஸ்தானுடன் இனி பேச்சே இல்லை : இழுத்து மூடிய அமைச்சர் ஜெய்சங்கா்!
No more talks with Pakistan Minister Jaishankar
பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டதாகவே கருதுவதாகவும், ஒவ்வொரு செயலுக்கும் பின்விளைவுகள் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-ஆவது சட்டப் பிரிவு முடிந்துபோன விவகாரமாகும் என்றும், எனவே இனி பாகிஸ்தானுடன் என்ன மாதிரியான உறவைப் பராமரிக்கலாம் என்பதே தற்போதைய கேள்வி என்று கூறினார். அதன்படி, பாகிஸ்தான் உடனான உறவைப் பொறுத்தவரை, தற்போதுள்ள நிலையை தொடர்வதில் இந்தியா திருப்தி அடையலாம் என்று ராஜீவ் சிக்ரி தனது புத்தகத்தில் பரிந்துரைத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சில நேரங்களில் ஆம் என்றும், சில நேரங்களில் இல்லை என்றும் இதற்கு பதில் சொல்லலாம் என்று கூறிய அவர், அமைதியாக இருப்பவர்கள் அல்ல நாங்கள். நிகழ்வுகள் நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
English Summary
No more talks with Pakistan Minister Jaishankar