சிறையில் இருக்கும் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அமைதிக்கான நோபல் பரிசு! - Seithipunal
Seithipunal


மூன்று பேருக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்த அளிப்பு! 

நோபல் பரிசு ஆனது ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளை சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நாகர்வே நாட்டிலும் பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டிலும் அறிவிக்கப்படுகிறது.

மருத்துவம், வேதியியல், இயற்பியல், மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவோர் குறித்த எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்திருந்தது.

இந்தியாவைச் சேர்ந்த இரு பத்திகையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக டைம்ஸ் நாளிதழ் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசானது 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெக்ஸ் ரியாலியாட்ஸ்கி, ரஷ்யாவின் மனித உரிமை அமைப்பான "மெமோரியல்" என்ற அமைப்பிற்கும், உக்கிரனின் மனித உரிமை அமைப்பான "சென்டர் ஃபார் சிவில் லிபிரிட்டிஸ்" என்ற அமைப்புக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. 

அமைதிக்கான நோபல் பரிசை ஒரு தனி நபரும் இரண்டு மனித உரிமை அமைப்புகளும் பெற்றுள்ளனர். மனித உரிமைக்கான நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி தற்போது பெலராஸ் சிறையில் உள்ளார். வரி எய்ப்பு புகார்க்கு உள்ளான அவர் தற்பொழுது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவரை விடுதலை செய்யுமாறு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கிய ஸ்வீடன் நாட்டு மனித உரிமை ஆணையம் பெலாரஸ் அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nobel Peace Prize shared between one person and two NGO


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->