நீண்ட தூர ஏவுகணையை சோதனை செய்தது வடகொரியா.!
North Korea has tested a long range missile
வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து உலக அச்சுறுத்தி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இது வரை 40-க்கும் மேற்பட்ட சோதனைகளை சோதனை செய்து அச்சுறுத்தியுள்ளது.
இந்நிலையில் வடகொரியா இன்று மீண்டும் நீண்ட தூரம் செல்லும் ஏவுகணை சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை கிழக்கு கடல் பகுதியில் நடத்தப்பட்டதாக வடகொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அமெரிக்காவின் நிலப்பரப்பைத் தாக்கும் அளவுக்கு நீண்ட தூரம் செல்லும் ஏவுகணையை வடகொரியா ஏவியுள்ளது என்று ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை ஹொக்கைடோவுக்கு மேற்கே சுமார் 210 கிமீ (130 மைல்) கடலில் விழுந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
North Korea has tested a long range missile