ஒரேநாளில் 23 ஏவுகணைகளை வீசி வடகொரியா அதிரடி சோதனை.! - Seithipunal
Seithipunal


வடகொரியா சர்வதேச விதிமுறைகளை மீறி அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து தொடர்ந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் தென்கொரியாவுடன் போர் பயிற்சியை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இன்று ஒரேநாளில் வடகொரியா 23 ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனை நடத்தியுள்ளது. காலை 17 ஏவுகணைகளும், நண்பகல் 6 ஏவுகணைகளும் வடகொரியா ஏவியுள்ளது. 

இதைத்தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை பதற்றம் நிறைந்த கிழக்கு கடற்பகுதியில் வீசி வடகொரியா சோதனை நடத்தியுள்ளதாக தெரிகொரியா தெரிவித்துள்ளது. மேலும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய அதேபகுதியில் தென்கொரியாவும் ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்துள்ளதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

North Korea launched 23 missiles in one day


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->