அமெரிக்கா-தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியை ஐ,நா நிறுத்த வேண்டும் - வடகொரியா வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் தென்கொரியா நாடு வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு அமெரிக்கா நாட்டுடன் இணைந்து பத்து நாள் கூட்டுப்போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த பயிற்சியின் போது நீண்ட தூரத்தில் குண்டுகளை வீசுவது மற்றும் போர் விமான பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்கின்றன. இந்த கூட்டுப்போர் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி வட கொரியா எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. 

இந்த எதிர்ப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் "இந்த கூட்டுப்போர் பயிற்சியானது தங்களது பாதுகாப்புக்காகவும், வடகொரியாவின் அணு ஆயுத பாதுகாப்பு அச்சுறுத்தலை சமாளிப்பதற்கும் அவசியமானது" என்று தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் இந்த கூட்டுப்போர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட்டு அமெரிக்க-தென்கொரிய கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்த வேண்டும் என்று வடகொரியா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் ஐ.நா.வுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. 

அதில், "அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து நடத்தும் கூட்டுப்போர் பயிற்சி நாட்டில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே ஐ.நா. இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக இந்த கூட்டுப்போர் பயிற்சிகளை நிறுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கூட்டுப்போர் பயிற்சிகள் தொடர்பாக ஐ.நா. அமைதி காப்பது தங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் வடகொரியா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

north korea says united nations should demands end to south korea us militry drills


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->