உளவு குற்றச்சாட்டு: ரஷ்யதூதரக அதிகாரிகளை வெளியேற்றிய நார்வே..! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை கண்டித்து பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளையும், வணிகம் சார்ந்த தடைகளையும் விதித்தது. மேலும் ரஷ்யா தூதரக அதிகாரிகள் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரிகள் உளவு பார்ப்பதாக கருதி பல நாடுகள் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு தடை விதித்தன.

இந்நிலையில் ரஷ்யாவின் அண்டை நாடான நார்வே தலைநகர் ஓஸ்லோவில் செயல்பட்டு வரும் ரஷ்ய தூதரகத்தில் சந்தேகத்திற்குரிய 15 ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக நார்வே வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்ய தூதர்கள் உளவு பார்ப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், தூதரக அதிகாரிகளின் செயல்பாடுகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதி 15 ரஷ்ய தூதர்களை வெளியேற்றுவதாக தெரிவித்துள்ளது.

மேலும் நார்வே வெளியுறவு துறை அமைச்சர் அன்னிகென் ஹூய்ட்பெல்ட், ரஷ்யாவின் உளவுத்துறை செயல்பாடுகளை எதிர்ப்பதற்கும், நார்வே நாட்டின் தேசிய நலன்களை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், நார்வேயின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் கண்டிப்பாக பதிலடி கொடுக்கும் என தெரிவித்துள்ளதாக ரஷ்ய ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Norway expels Russian embassy employees for espionage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->