இனி வாரத்தில் நான்கு நாட்கள்தான் வேலை...குழந்தை பெத்துக்க புதிய முயற்சி! - Seithipunal
Seithipunal


ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறையை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டு வரப்பட உள்ளதாக டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்கே அறிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்த வண்ணம் உள்ளது. பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு  விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது .ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பாலியல் உறவின் மீதும் நீண்ட கால காதல் மற்றும் திருமண உறவில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் வெளியாகி வருகின்றன.ரஷியாவில் இதனால் தனியாக பாலியல் அமைச்சகத்தையே உருவாக்க அதிபர் புதின் திட்டமிட்டு வருகிறார்.

குறிப்பாக ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஜப்பானில் 2022ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் 5.6 சதவீதம் குறைந்து 727,277 ஆகப் பதிவானது.

ஆகவே ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறையை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டு வரப்பட உள்ளதாக டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்கே அறிவித்துள்ளார்.

2025 ஏப்ரல் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்றும் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும் கவர்னர் யூரிகோ கொய்கே தெரிவித்துள்ளார். இதற்க்கு ஜப்பானில் மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Now I work four days a week Japan's new initiative to have a baby


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->