ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமான தாக்குதல்; இந்தியா கண்டனம்..!
Pakistan airstrikes on Afghanistan; India condemns
ஆப்கானிஸ்தானின் குறிப்பிட்ட சில பகுதிகள் மீது கடந்த வாரம் பாகிஸ்தான் விமான தாக்குதல் நடத்தியது. குறித்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வாலிடம் பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு,அவர் தனது X தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
"ஆப்கானிஸ்தான் குடிமக்கள் மீது வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அறிந்தோம்.
தாக்குதலில் பல விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகி உள்ளன. அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். உள்நாட்டு தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குற்றம் சாட்டுவது பாகிஸ்தானின் பழைய வழக்கம்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Pakistan airstrikes on Afghanistan; India condemns