கடும் பஞ்சம்.. "இலவச உணவு" வாங்குவதில் கூட்ட நெரிசல்.. பாகிஸ்தானில் 21 பேர் பரிதாப பலி..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் தடுமாறுகிறது. பொதுமக்களுக்கான உணவு பொருட்கள் விநியோகத்தின் போது நடந்த நெரிசலில் 11 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் நிலவும் கடும் விலைவாசி உயர்வு, அதீத கடன் சுமை மற்றும் டாலர் பற்றாகுறையினால் அந்நாடு தடுமாறி வருகிறது.

பொது மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கராச்சி நகரில் ரம்ஜான் கால இலவச உணவு விநியோக மையம் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 8 பேர் பெண்கள், 3 பேர் சிறுவர், சிறுமியர் என தெரியவந்துள்ளது. ஏராளமானவர்கள் இந்த துயர சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர். காராச்சியில் உள்ள ஒரு தொழிற்சாலை உரிமையாளர் இலவச உணவு வழங்கும் மையத்தை காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்காமல் நடத்திய போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள இலவச உணவு விநியோக மையங்களில் ஏற்பட்ட நெரிசல்களில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. பொருளாதார நிலைக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் மக்கள் உணவுக்கு வழி இன்றி கடும் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan crisis free food stampede 21 people killed


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->