மனித வளர்ச்சி தரவரிசை.! பாகிஸ்தான் பின்னடைவு.! - Seithipunal
Seithipunal


ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டம் சார்பில் வகைப்படுத்தப்பட்ட 2021-22ஆம் ஆண்டிற்கான மனித வளர்ச்சி தரவரிசை பட்டியல் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தரவரிசை ஒரு நாட்டின் சுகாதாரம், கல்வி மற்றும் சராசரி வருமானத்தின் நிலையைக் குறிக்கிறது.

இந்நிலையில் 192 நாடுகளில் பாகிஸ்தான் கடந்த ஆண்டை விட 7 இடங்கள் பின்தங்கி 161-வது இடத்திற்கு சென்றுள்ளது. மேலும் மக்களின் சராசரி ஆயுட்காலம் 66.1 ஆண்டுகள் எனவும், குழந்தைகள் சராசரியாக 8 வயதில் பள்ளிக்கு சேர்க்கப்படுகின்றனர் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

இதையடுத்து கடந்த ஆண்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பம், பொருளாதார சரிவு, பருவநிலை மாற்றங்கள் இதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் மட்டுமே மனித வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan in low position in human development index


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->