பாகிஸ்தான் ரூபாய்க்கு தடை.! அதிரடி உத்தரவிட்ட தலீபான்கள்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஓராண்டு காலமாக தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு பாகிஸ்தான் ரூபாய்களுக்கு திடீரென  தடை விதித்து தலீபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் ரூபாய் மீதான தடை அக்டோபர் 1 முதல் ஆப்கானிஸ்தானில் அமலுக்கு வந்துள்ளது. 

இதுகுறித்து தலீபான் புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "ஆப்கானிஸ்தானில் நிதி பரிவர்த்தனைகளில் பாகிஸ்தானிய ரூபாயைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண பரிமாற்ற விநியோகஸ்தர்கள் மட்டும் ரூ.5,00,000 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது ஆப்கானிஸ்தானில் உள்ளூர்வாசிகளும் வர்த்தகர்களும் பாகிஸ்தானிய ரூபாயை அன்றாட செலவினங்களுக்காக பயன்படுத்தும் நேரத்தில் இந்த நடவடிக்கையை தலீபான்கள் எடுத்துள்ளனர். 

கடந்த ஜூலை மாதம் காபூலில் பதுங்கியிருந்த அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி, அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள இலக்குகளை தாக்க அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அந்நாடு அனுமதிப்பதாக தலீபான்கள் குற்றம்சாட்டினர்.

இதற்காக பாகிஸ்தான் பெரும் தொகையைப் பெற்றுள்ளதாக தலீபான்கள் குற்றம்சாட்டி இருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan money ban in afganistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->