திடீரென குறைந்த பெட்ரோல் விலை - மகிழ்ச்சியின் உச்சத்தில் பொதுமக்கள்.!
petrol price reduced in pakisthan
நமது அண்டை மாநிலமான பாகிஸ்தானில் பணவீக்கம் காரணமாக விலைவாசி உயர்ந்ததால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் விலையை அந்நாட்டு அரசாங்கம் குறைத்துள்ளது.
அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.20 குறைக்கப்பட்டு ரூ.258.16 ஆகவும், அதிவேக டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.33 என குறைக்கப்பட்டு ரூ.267.89 ஆக விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும், சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாறுபாட்டின் அடிப்படையில், எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம், நுகர்வோர் விலைகளை நிர்ணயித்துள்ளதாகவும், இந்த புதிய விலைகள் அடுத்த 15 நாட்களுக்கு அமலில் இருக்கும்" என்றுத் தெரிவித்துள்ளது.
இந்த பெட்ரோல் விலையை குறைப்பு பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், கடந்த ஒன்றரை மாதத்தில் தொடர்ந்து 3 முறை எரிபொருள் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
petrol price reduced in pakisthan