ஜி 7 மாநாடு: ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க திட்டம்..! - Seithipunal
Seithipunal


2023ஆம் ஆண்டிற்கான ஜி7 உச்சி மாநாடு ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமாவில் இன்று தொடங்க உள்ளது. கனடா, பிரான்ஸ், இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இன்று பங்கேற்க உள்ளனர். 

மேலும் இந்த மாநாட்டில் சர்வதேச உணவு நெருக்கடி, ஆற்றல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், சுகாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜி 7 மாநாட்டில் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடை விதிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அமெரிக்க அதிகாரி, சர்வதேச சந்தையில் ரஷ்யாவின் எரிசக்தி துறையின் ஆதிக்கத்தை குறைப்பதற்கான திட்டம் கைவசம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரஷ்யாவின் போர்க்களத்துக்கு தேவையான பொருட்களை முடக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் போரை ஆதரிக்கும் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது அமெரிக்கா 300 புதிய தடைகளை விதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Plans to implement more sanction on Russia in G7 summit


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->