நீங்கள் விரைவில் நலம்பெற்று ஆரோக்கியமாக மீண்டுவர வேண்டும் - பிரதமர் மோடி போட்ட டிவிட்.! - Seithipunal
Seithipunal



ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

இதனை தொடர்ந்து, தற்போது ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் சார்பில், பிரதமர் புமியோ கிஷிடா அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "ஜப்பான் பிரதமர் புமியோ ஷிகிடா கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம்பெற்று ஆரோக்கியமாக மீண்டுவர வேண்டும்". என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM MODI Wish Japan PM


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->