நிமோனியா காய்ச்சல் காரணமாக இரு நுரையீரலும் பாதிக்கப்பட்டு பாப் பிரான்சிஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், "தான் உயிர் பிழைக்க மாட்டேன், மரணத்திற்குத் தயாராகி வருகிறேன்" என்று தனது உதவியாளர்களிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாப் பிரான்சின் அவர்கள்தற்போது தனது இறுதி தறுவாயில் இருப்பதாகவும் அவரின் இறுதி சடங்குக்கான அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திகை பார்க்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 88 வயதான போப் பிரான்ஸிஸ் கடந்த வெள்ளிக்கிழமை, உடல் நலக்குறைவால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் இரு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் சுவாச பிரச்சினையில் சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த புதன் கிழமைக்கு பின்னர், அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், அவர் விரைவில் உயிரிழந்து விட கூடும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் கூறியுள்ளன.
தற்போது பிரான்ஸிஸ் வைத்தியர்களின் கண்காணிப்பில் செயற்பட்டு வருகிறார். அத்துடன் அவர் காலை நேர ஏஞ்சலஸ் பிரசங்கத்தை வழங்குவதிலிருந்து தடுக்கப்பட்டதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்சிஸ் அவர்கள் இளமைப் பருவத்தில் சுவாசத் தொற்று காரணமாக நுரையீரலின் ஒரு பகுதியை இழந்துள்ளார். இதன் காரணமாக அண்மையில் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்,பாப் கடந்த ஆண்டு, பாப் ஒருவர் இறந்தால் நடக்கும் சில மர்மமான சடங்குகளைத் தவிர்த்து, தனக்கென ஒரு இறுதிச் சடங்கை நடத்த ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரம்பரியமாக ஒரு பாப் இறந்தால் அவரின் மரணத்தை உறுதிப்படுத்துவது கமேர்லெங்கோ எனப்படும் ஒரு மூத்த வத்திக்கான் அதிகாரியின் பணியாகும். தற்போது, அந்தப் பதவியை ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த கார்டினல் கெவின் ஃபாரெல் என்பவர் வகித்து வருகிறார்.
அத்துடன், பாரம்பரியம் நிலைத்திருந்தால், பாப் பிரான்சிஸின் உடலை அவரது தனிப்பட்ட தேவாலயத்தில் சந்தித்து, அவரை எழுப்ப அவரது பெயரை அழைப்பது ஃபாரெல் என்பவர் தான் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முத்திரை மோதிரம்
பொப்பிற்கு அதிகாரப்பூர்வ முத்திரையாக செயல்படும் அவரது முத்திரை மோதிரம் சிதைக்கப்படும் அல்லது அழிக்கப்படும். இது அவரது ஆட்சியின் முடிவைக் குறிப்பதுடன் மேலும் பாப் ஆண்டவர் குடியிருப்புகள் மூடப்படும்.

அத்துடன், பொப் இறந்துவிட்டார் என்றால் முதலில் வத்திக்கான் ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையில், உலகிற்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு, மூத்த திருச்சபை அதிகாரிகளின் நிர்வாகக் குழுவான கார்டினல்கள் கல்லூரிக்கு கமர்லெங்கோ அறிவிப்பார் என கூறப்படுகிறது. இது அவர்களின் பாரம்பரிய முறை என தெரிவிக்கின்றது.
பாப் இறந்தால் இத்தாலி முழுவதும் ஒன்பது நாள் துக்க தினமாக அனுஸ்டிக்கப்படும். அந்த நேரத்தில், அவரது உடல் பொது மக்கள் பார்வைக்காக செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் வைக்கப்படும். அங்கு உலகத் தலைவர்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்துவார்கள் எனவும் கூறப்படுகிறது. இது அவர்களின் வழக்கமான முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பாப் பிரான்ஸிஸ், வழக்கமாக நடைபெறும் சில விரிவான சடங்குகளைக் கைவிட்டு, தனக்கென ஒரு இறுதிச் சடங்கை நடத்துமாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவரது இறுதிச்சடங்கு, அவரது முன்னோடிகளைப் போல உயர்ந்த மேடையில் இல்லாமல் நடத்தப்பட்டு, அவரின் உடல் திறந்த சவப்பெட்டியில் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சவப்பெட்டிகள்
பாப் ஆண்டவர் ஒருவரின் உடல், மூன்று வகையான சவப்பெட்டிகளில் அடக்கம் செய்யப்படும். சைப்ரஸ், நாக உலோகம் மற்றும் பலகை ஆகியவற்றால் அவை உருவாக்கப்படுவது மரபாக உள்ளது. ஆனால், பிரான்சிஸ் அவரை மரம் மற்றும் நாகத்தால் ஆன ஒரே சவப்பெட்டியில் அடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, பாப்பின் இறுதிச் சடங்கிற்கு சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, புதிய பொப்பை தேர்ந்தெடுக்கும் செயல்முறையை மிகவும் இரகசியமாக நடத்த கார்டினல்கள் கல்லூரி சிஸ்டைன் தேவாலயத்தில் கூடும். தொழில்நுட்ப ரீதியாக, ஞானஸ்நானம் பெற்ற எந்த ரோமன் கத்தோலிக்க ஆணும் பாப்பாண்டவராக பதவியேற்க தகுதியுடையவர், ஆனால், கடந்த 700 ஆண்டுகளாக, பாப் எப்போதும் கார்டினல்கள் கல்லூரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.
இதன்படி, பாப்பினை தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு நாளில், சிஸ்டைன் சேப்பல் மூடப்பட்டு, இரகசியக் காப்புப் பிரமாணம் செய்து கொண்ட சுமார் 120 கார்டினல்கள் உள்ளே பூட்டி வைக்கப்பட்டு வாக்களிப்பு நடத்தப்படும்.
புதிய பாப் ஆண்டவர் தெரிவு
எந்த வேட்பாளரும் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறவில்லை என்றால், மற்றொரு சுற்று வாக்களிப்பு நடைபெறும். ஒரு நாளைக்கு நான்கு சுற்றுகள் வரை இருக்கலாம்.
கடந்த 2013-ஆம் ஆண்டில் பாப்பிரான்சிஸைத் தேர்ந்தெடுக்க சுமார் 24 மணிநேரமும் ஐந்து வாக்குச்சீட்டுகளும் எடுக்கப்பட்டன.ஆகவே இந்த செயன்முறை அதிக நேரம் எடுக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அதனை தொடர்ந்து, வாக்குகள் எண்ணப்பட்டவுடன், அவை சிஸ்டைன் சேப்பலுக்குள் ஒரு அடுப்பில் இட்டு எரிக்கப்படுகின்றன, இது புகைபோக்கி வழியாக வெளி உலகிற்கு ஒரு புகை சமிக்ஞையை அனுப்புவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, ஒரு பொப் தெரிவு செய்யப்பட்டுள்ளாரா..? இல்லையா ..?என்பது வெளியுலகிற்கு காட்டப்படும் என அந்நாட்டு பாரம்பரிய முறை குறிப்பிடுகின்றது.
இந்நிலையில், தற்போது, உடல் நலக் குறைவில் உள்ள புனித பாப் ஆண்டவர் ஒரு வேலை இறக்க நேரிட்டால், அவரது இறுதிக்கிரியைகளும் குறித்த பாரம்பரிய முறைப்படி நடத்தப்படும் என்பதால் அதற்கான ஒத்திகைகள் பார்க்கப்படுவதாகவும் அதனை தொடர்ந்து புதிய தேர்வு குறித்தும் வத்திக்கானில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் இத்தாலி செய்திகள் தெரிவிக்கின்றன.