ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பீதியில் சாலைகளில் தங்கமடைந்துள்ள மக்கள்..!
Powerful earthquake in Japan
ஜப்பானில் யுஷு தீவில் இன்று மாலை 7.34 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
யுஷு தீவு 14 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட அப்பகுதியாகும். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அத்துடன், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்03 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன், தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. அத்துடன், இந்த பலத்த நிலநடுக்கத்தால் 03 லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில் இன்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை பீதியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Powerful earthquake in Japan