கோத்தபய ராஜபட்ச தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.!
President Gotabaya Rajapaksa resigned
இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு அரசியலில் அசாதாரணமான சூழல் இருந்து வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலக கோரி தொடரப்பட்ட போராட்டத்தின் காரணமாக அதிபர் கோத்தபய ராஜபட்ச இலங்கையை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. மேலும், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவில் தஞ்சமடைந்திருந்ததாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. மாலத்தீவில் உள்ள இலங்கை மக்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியது.
இலங்கை மக்களின் அதிபர் பதவி விலக வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று கோத்தபய ராஜபட்ச தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
English Summary
President Gotabaya Rajapaksa resigned