மாஸ்கோவில் பிரதமர் மோடி மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு அதிபர் புதின் புகழாரம் - Seithipunal
Seithipunal


ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஷிய அதிபர் விலாடிமிர் புதின் பேசினார். அப்போது அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டம் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை சிறப்பாக பாராட்டினார்.

அதிபர் புதின் கூறுகையில், 'மேக் இன் இந்தியா' திட்டம் ரஷியாவின் இறக்குமதி மாற்று திட்டத்துடன் ஒத்திசைந்ததாக உள்ளது. இந்த முயற்சி பாராட்டத்தக்கது. தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் மோடி சிறப்பாக செயல்படுகிறார் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ரஷிய உற்பத்தி தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைக்க தங்களும் தயார் நிலையில் உள்ளதாக புதின் அறிவித்தார். இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது நன்மை பயக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிபர் புதின், விவசாய துறையில் ரஷியா முன்னேற்றம் அடைந்துள்ளதையும் வலியுறுத்தினார்."1988-ல் 35 பில்லியன் டாலர்களுக்கு தானியங்களை இறக்குமதி செய்த ரஷியா, 2023-ல் 66 பில்லியன் டாலர்களுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்துள்ளது," என்றார்.

மேலும், மேற்கத்திய பொருட்களை விட ரஷிய பொருட்களுக்கு உலக சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' திட்டம் உலக அளவில் பாராட்டப்படுவதாகவும், இது இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் எனவும் புதின் பேச்சில் நம்பிக்கை வெளியிட்டார். இந்தியா-ரஷியா இடையேயான உறவுகளை இது மேலும் வலுப்படுத்தும் எனும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Putin praises PM Modi and Make in India initiative in Moscow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->