போரை முடிவுக்கு கொண்டுவரவே ரஷ்யா விரும்புகிறது - அதிபர் புதின் - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 மாதங்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார ரீதியாகவும் ஆயுதங்களை வழங்கியும் உதவி வருகிறது.

இந்நிலையில் போர் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெளிநாட்டுப் பயணமாக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 1.85 பில்லியன் டாலர் அளவில் பாதுகாப்பு உதவி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வரவே ரஷ்யா விரும்புவதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புதின், போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. விரைவாக போர் முடிவுக்கு வரும் என்பதை உறுதிப்படுத்தவே நாங்கள் முயலுகிறோம் என்றார்.

மேலும் எல்லா மோதல்களும், ஏதோ ஒரு வகையில் அல்லது பேச்சு வார்த்தையில் முடிவடைகின்றன என்றும், நம்முடைய எதிரிகள் எவ்வளவு வேகமாக புரிந்து கொள்ளுகிறார்களோ அவ்வளவு வேகமாக போர் முடிவுக்கு வரும் என்று ரஷ்யா அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Putin says Russia wants to end war


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->