போரில் ரஷியா வெல்வதில் துளி சந்தேகமும் இல்லை - அதிபர் புதின் பரபரப்பு பேச்சு.!
president putin speach for russiya ukraine war
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கியது. இந்த போர் இன்னும் சில வாரங்களில் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இந்த போரினால் இரண்டு நாடுகளும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.
இதில், ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்த ரஷ்யா போரில் இருந்து பின்வாங்காமல், தொடர்ந்து வீரர்களை ஒன்று திரட்டி போர் புரிந்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு ரஷியா தீவிரமாக போரிட்டு வருகிறது. இதற்கு உக்ரைனும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ரஷியாவுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையே ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி, உக்ரைன் நாட்டின் சில முக்கிய கட்டிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில், கீவ் நகரில் டினிப்ரோவில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
இந்த நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் 'உக்ரைன் நாட்டில் நுழைந்துள்ள ரஷியப்படைகள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை' என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
president putin speach for russiya ukraine war