பாலியல் புகாரில் 120 கோடி ரூபாய் சமரசம்.! இங்கிலாந்தில் காட்டு தீயாய் பரவும் தகவல்.!
prince Andrew Virginia
இங்கிலாந்து இளவரசர் மீது பாலியல் புகார் அளித்த பதினேழு வயது பெண்ணின் அறக்கட்டளை நிறுவனத்திற்கு, இந்திய மதிப்பில் 120 கோடி ரூபாய் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன், இளவரசர் ஆண்ட்ரூ (60 வயது) மீது, கடந்த 2001ஆம் ஆண்டு, வர்ஜீனியா கியூப்ரே என்ற 17 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, வர்ஜீனியா கியூப்ரே நியூயார்க் நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதே சமயத்தில் வர்ஜீனியா கியூப்ரே இந்த பாலியல் புகாரை, இளவரசர் ஆண்ட்ரூ தொடர்ந்து மறுத்து வந்தார். மேலும், தன் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார்.
கடந்த மாதம் ஆண்ட்ரூ மீதான பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை அவர் சந்தித்துதான் ஆக வேண்டும் என்று, நியூயார்க் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
இதற்கிடையே ,ராணி இரண்டாம் எலிசபெத் அரியணை ஏறி 70வது ஆண்டு ஆவதால், இங்கிலாந்து அரச குடும்பம் கொண்டாடி வரும் நேரத்தில், இப்படி ஒரு வழக்கு இருப்பது அவர்களுக்கு தர்மசங்கடமான இருந்துள்ளது.
இதனால் இந்த வழக்கை சுமூகமாக முடித்து வைக்க இளவரசர் ஆண்ட்ருவுக்கு, ராணி இரண்டாம் எலிசபெத் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
இதன் காரணமாக தன் மீதான பாலியல் வழக்கை சுமுகமாக முடிவுக்கு கொண்டுவர இளவரசர் ஆண்ட்ரூ. 17 வயது இளம்பெண் வர்ஜீனியா கியூப்ரேவுடன் சமரசம் செய்துகொண்டு உள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக அவர் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 120 கோடி ரூபாய் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.