பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க தடை! ஆப்கனில் தாலிபான் அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க தடை விதித்து ஆப்கனில் தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை கைப்பற்றிய பிறகு தனது கடுமையான ஷரியா கொள்கையினை பின்பற்றி ஆட்சி செய்து வருகிறது.

இதனால் நாட்டின் கேளிக்கை நிகழ்ச்சிகள், திரையரங்குகள், மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டன.

குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வி முற்றிலுமாக மறுக்கப்பட்ட நிலையில் பெண்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஹேராட் நகரில் மட்டும் பெண்களுக்கு வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது நாடு முழுவதும் பெண்களுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு உரிமம் வழங்க கூடாது என தாலிபான் அரசு அறிவித்துள்ளது.

இதனால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுதந்திரம் முற்றிலுமாக மறுக்கப்பட்டு, பெண்கள் கடுமையான பாதிப்பினை சந்தித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prohibition on issuing driving licenses to women in Afghanistan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->