ரஷ்யா கைபற்றிய உக்ரைன் மாகாணங்களை சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரித்தார் அதிபர் புடின்.!
Putin announced 4 provinces to be independent territories
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 7 மாதங்களாக தீவிரமாக நடந்து வரும் நிலையில், உக்ரைனிடமிருந்து லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா மாகனங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது.
இதையடுத்து இந்த நான்கு மாகாணங்களை ரஷ்யவுடன் இணைப்பதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் பெரும்பாலான மக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தெற்கு உக்ரைன் பகுதிகளான ஜபோரிஜியா மற்றும் கெர்சன் மாகணங்களை சுதந்திர பிரதேசமாக அங்கீகரிக்கும் ஆணையில் அதிபர் புடின் கையெழுத்திட்டார்.
மேலும் ஜபோரிஜியா மற்றும் கெர்சன் மாகணங்களின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை அங்கீகரிக்க உத்தரவிடுவதாக அதிபர் புடின் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் 4 மாகணங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் நிகழ்ச்சி இன்று ரஷ்ய அதிபர் மாளிகையில் நடைபெற உள்ளது. இதற்காக நான்கு மாகாணங்களின் தலைவர்கள் ரஷ்ய தலைநகருக்கு வந்தடைந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புடின் பொதுமக்களிடையே உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Putin announced 4 provinces to be independent territories