பெலாரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அணு ஆயுதங்கள் - புதின் அறிவிப்பு
putin announced Nuclear weapons sent to Belarus
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இதனை மீட்பதற்காக உக்ரைன் படைகள் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் அதிநவீன ஆயுதங்களை வழங்கி உதவி வருகிறது. இதேபோன்று உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே ரஷ்யாவுக்கு அண்டை நாடான பெலாரஸ் உதவி செய்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி ரஷ்யாவை தோற்கடிக்க விரும்பும் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பெலராஸில் அணுஆயுதங்கள் நிலைநிறுத்தப்படும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார்.
இதன்படி, தற்பொழுது அணுஆயுதங்கள் பெலாரஸ்க்கு அனுப்பப்பட்டுள்ளது என்று புதிர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதன் கூறும்போது, முதல் அணு ஆயுதங்கள் பெலாரஸ் பிராந்தியத்திற்கு வழங்கப்பட்டன. இது முதல் முறையின் முதல் பகுதி. கோடையின் இறுதி அல்லது ஆண்டின் இறுதிக்குள் இந்த வேலை முழுமையாக முடியும்.
மேலும் ரஷ்யாவுக்கு மூலோபாய தோல்வியை ஏற்படுத்த முடியாது என்பதை மேற்கத்திய நாடுகளுக்கு நினைவூட்டுவதற்காக அணுஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
putin announced Nuclear weapons sent to Belarus