இலங்கையின் பொருளாதார நிலையை சீர் செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவை! பிரதமர் ரனில் விக்ரமசிங்கே.! - Seithipunal
Seithipunal


இலங்கையின் பொருளாதார நிலையை சீர் செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் உணவுப் பொருட்கள் மற்றும் எரி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு அவற்றின் விலை உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இலங்கையின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், நமது கையிருப்பில் ஒரு நாளைக்கு தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் மே 19 ஜூன் 1 ஆகிய தேதிகளில் இரண்டு டீசல் கப்பல்களும் மே 18, 29 ஆகிய தேதிகளில் இரண்டு பெட்ரோல் கப்பல்களும் வர உள்ளன என்றும், நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதை விட பயங்கரமான சவால் என்றார்.

மேலும் இலங்கையின் பொருளாதார நிலையை சீர் செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranil wikramasinghe speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->