செங்கடல் பகுதியில் நடந்தது என்ன? பற்றியெரிந்த கப்பல்கள்.. தாக்குதல் நடத்திய கிளர்ச்சியாளர்கள்! - Seithipunal
Seithipunal



பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றது. இதை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் மீது நடத்தும் தாக்குதல் என்று இஸ்ரேல் கூறி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரிடம்  பிணையாக உள்ள அனைவரையும் விடுவித்தால் மட்டுமே பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்துவோம் என்று இஸ்ரேல் அரசு கூறி வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து செங்கடலில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

குறிப்பாக இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறி வைத்தே ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் உள்ளது. இந்நிலையில் நேற்று செங்கடலில் ரோசா மற்றும் வான்டேஜ் ஆகிய பகுதிகளில் 2 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதே போல் அரபிக் கடல் பகுதியில் அமெரிக்க நாட்டுக் கப்பல் மீதும் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் செங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் கடலில் நடந்த இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rebels Attacks on Red Sea


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->