அடுத்த மாதத்திற்குள் பெலாரஸ்க்கு அணு ஆயுதங்கள் - ரஷ்யா அதிரடி அறிவிப்பு
Russia announced that nuclear weapon to Belarus by next month
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனின் கிழக்கு நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி முன்னேறி வருகின்றன. மேலும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத பலத்துடன் உக்ரைன் படைகள் தொடர்ந்து எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனிடையே ரஷ்யாவின் ஆளில்லா விமானங்களை சமாளிக்க உக்ரைனுக்கு கூடுதல் போர் விமானங்களை வழங்குமாறு மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற கூட்டத்தில், அணுசக்தி நிலைநிறுத்தம் தொடர்பாக பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ மற்றும் ரஷ்ய அதிபர் புடின் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து ரஷ்யா வெளியிட்ட தகவலில், வரும் ஜூலை மாத தொடக்கத்தில் பெலாரஸ் நாட்டில் நடந்து வரும் அணு ஆயுதங்களை பாதுகாக்கும் கட்டமைப்பு பணிகள் முடிவடையும். இதையடுத்து அடுத்த மாதத்திற்குள் பெலாரஸுக்கு அணு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸில் அணு ஆயுதங்கள் நிலை நிறுத்தப்படுவது உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Russia announced that nuclear weapon to Belarus by next month