அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


உக்ரைனில் அப்பாவி மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக கூறும் மேற்கத்திய நாடுகள் அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா நான்காவது வாரமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் ரஷ்யப் படைகளை முன்னேற விடாமல் தடுத்து இருப்பதால் அப்பாவி மக்கள் குடியிருக்க கூடிய பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக இங்கிலாந்து ராணுவம் தெரிவித்துள்ளது.

மக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகள் திரையரங்குகள் மால்கள் வழிபாட்டுத் தலங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளது.

மரியுபோல் நகரில் மக்கள் தஞ்சம் அடைந்து இருக்கக் கூடிய திரையரங்கு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி இருக்கிறது என்று மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி உள்ளன. 

பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் தஞ்சம் அடைந்திருக்க கூடிய திரையரங்கின் வெளிப்புறத்தில் அது தொடர்பான புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்த நிலையில் அதனையும் மீறி ரஷ்ய அந்த திரையரங்கு மீது தாக்குதல் நடத்த இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கடுமையான கண்டனத்தையும் மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia attacks on common people area


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->