துப்பாக்கியுடன் பள்ளிக்கு சென்ற சிறுமி: பறிபோன உயிர்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ரஷ்யாவில் சிறுமி பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்று மாணவர்களை சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

துப்பாக்கியுடன் சென்ற 14 வயது சிறுமியிடம் எப்படி துப்பாக்கி கிடைத்தது என சிறுமியின் தந்தையிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுபோன்ற சம்பவங்கள் ரஷ்யாவின் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் செப்டம்பரில் 2 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றதில் இரண்டு குழந்தைகள் மற்றும் 17 பேர் கொல்லப்பட்டனர். 24 பேர் படுகாயம் அடைந்தனர். 

இதனைத் தொடர்ந்து கடந்த 2018 மற்றும் 2021ஆம் ஆண்டில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia girl went to school with gun


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->