ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்! 51 பேர் பலி! 270-க்கும் மேற்பட்டோர் படுகாயம்! - Seithipunal
Seithipunal


ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்! போர் வீரர்கள் உள்பட 51 பேர் பலி! 270-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ரஷ்யா உக்ரைனின் மத்திய பகுதிகளில் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் உயிரிழந்தனர். 270-க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர்.

இது குறித்து உக்ரைன் ராணுவம் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்யா திடீரென உக்ரைனின் மத்தியப் பகுதியில் உள்ள போல்டாவா பகுதியை நோக்கி  ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பின் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி எழுப்பியும் கூட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல போதிய அவகாசம் இல்லாமல் போனது. ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்திய இடங்களில் ராணுவ அகாடமி மற்றும் மருத்துவமனை ஆகியவை இருந்தன. இந்தத் தாக்குதலில் உக்ரைன் போர் வீரர்கள் உள்பட 51 பேர் பரிதாபமாக பலியானார். 270-க்கும் மேற்பட்டோர்படு காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளது

இந்த ரஷ்யா ஏவுகணை தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்து “உக்ரைன் மீது நடத்தப்பட்ட ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலுக்கு தக்க பதிலடியை திருப்பி கொடுப்போம்” என்று அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டும் பிப் 24 ஆம் தேதி அதிகாலையில் உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் போரை தொடங்கியது. இந்த போர் 2 ஆண்டுகள் கடந்தும் இதுவரை நீடித்து கொண்டே உள்ளது. இருதரப்பிலும் உயிரிச்சேதங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளன. உலக நாடுகள் பல பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது  விதித்துள்ளது. இதனால் ரஷ்யா கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. பின்னர் உக்ரைனும் வேளாண் உற்பத்தி மற்றும் எண்ணெய் வர்த்தகம் ஆகியவற்றில் கடும் சரிவை சந்தித்துள்ளது.

இந்த சூழ்நிலையில்,  ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி எடுத்து கொண்டு வருகின்றன. கடந்த ஜூன் 15, 16-ம் தேதிகளில் சுவிட்சர்லாந்தில் அமைதி உச்சி மாநாடு நடத்தப்பட்ட நிலையில், அதில் அமெரிக்கா உட்பட 92 நாடுகள் பங்கேற்றன. ஆனால், ரஷ்யா புறக்கணித்ததால், அமைதி உச்சி மாநாடு தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில்,  2-வது அமைதி உச்சி மாநாடு இந்தியா சார்பில் நடத்தப்படலாம் என்றும் இதற்கு முன்னோட்டமாகவே, கடந்த ஜூலை மாதத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் அதற்கு பின் சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து, போரை நிறுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia missile attack on Ukraine 51 people including soldiers died More than 270 people were seriously injured


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->