உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை மழை.!
Russia missiles attack on Ukraine capital Kiev
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் உக்ரைனின் முக்கிய நகரங்களின் உள் கட்டமைப்புகள் சிதைந்து போயுள்ளன. மேலும் இரண்டாம் கட்ட தாக்குதலை தீவிரமாக ரஷ்ய தற்பொழுது நடத்தி வருகிறது.
இதில் போரின் தொடக்கத்தில் இருந்தே உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஏவுகனைகள், ட்ரோன்கள் மூலம் தாக்கி வரும் நிலையில் உக்ரைன் படைகள் அதை முறியடித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளன. இந்த ஏவுகணை மழையால் கீவ் நகரமே அதிர்ந்தது.
ரஷ்ய படையின் இந்த தாக்குதலில் 18 வீடுகள் உட்பட ஏராளமான கட்டிடங்கள், வணிகவளாகங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. பல கட்டிடங்கள் தீ பற்றி எரிந்து நாசமாகின. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதாக எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும் உக்ரைனின் சோலிடர் நகரை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்ததை உக்ரைன் அதிபர் ஜெலனஸ்கி முற்றிலுமாக மறுத்துள்ளார்.
English Summary
Russia missiles attack on Ukraine capital Kiev