அதிபர் மாளிகையில் பரபரப்பு .. படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த ரஷிய அதிபர் புதின்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில ஆண்டுகளாக ரஷிய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து, வதந்திகள் பரவி வருகின்றன. அதில் முதல் கட்டமாக, புதினுக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக தகவல் பரவியது. ஆனால், இந்த தகவலுக்கு ரஷிய அதிபர் மாளிகை முற்றிலுமாக மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் கடந்த மாதம்  கரீபிய தீவு நாடான கியூபாவின் அதிபர் மிகைல் டியாஸ் கனேலை, சந்தித்து பேசினார். அப்போது புதினின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்ததாகவும், அவை ஊதா நிறத்தில் காணப்பட்டதாகவும், மேடையில் அமர்ந்திருக்கும் போது அசவுகரிய தன்மையை உணர்ந்ததாகவும் இங்கிலாந்து ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.

இந்நிலையில், சமீபத்தில் புதின் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகை படிக்கட்டுகளில் இறங்கி வரும் போது, தவறி விழுந்து, அவரது கட்டுப்பாட்டை மீறி இயற்கை உபாதைகள் வெளியேறியதாக சில ஊடகங்களில் செய்தி பரவியது. 

மேலும், புற்றுநோய் காரணமாக, அவரது வயிறு மற்றும் குடல் போன்றவை ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், அவரது கட்டுப்பாட்டை மீறி இயற்கை உபாதை வெளியேறியது என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

russia president putin fell down in pesident house for health issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->