உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யா மீண்டும் ஏவுகணை மழை.! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போரில் உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றுவதற்கு ரஷ்யா தீவிர தாக்குதலில் நடத்தி வருகிறது. குறிப்பாக கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யா ஏவுகணை மழை பொழிந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உக்ரைன் ராணுவ தலைமை அதிகாரி வாலெரி ஸலுஷனீ கூறும்பொழுது, அனைத்து திசைகளில் இருந்தும் உக்ரைன் நகரங்களின் மீது ரஷ்யா பல்வேறு வகை ஏவுகணைகளை வீசியுள்ளது. ஏவப்பட்ட 36 ஏவுகணைகளில் 16 ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாகவும், மீதமுள்ள ஏவுகணைகள் இலக்குகளை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் தலைமை உதவியாளா் ஆண்ட்ரி யொ்மாக், போரில் ரஷ்ய படைகள் உத்திகளை மாற்றியுள்ளதாகவும், உக்ரைனின் தடுப்பு அமைப்பை கண்டறிவதற்காக போலியான இலக்குகளை நோக்கி ஏவுகணைகள் வீசப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வான் பாதுகாப்பு அமைப்புகளை குழப்பும் வகையில் சமிஞ்கைகளை எழுப்பும் பலூன்களை பறக்க விடுவதாகவும், ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலா் ஒலெக்ஸி டேனிலோவ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia rains missiles again in different parts of Ukraine


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->