முக்கிய பகுதிகளை கைப்பற்றி போரில் வேகமாக முன்னேறி வரும் ரஷ்யப்படைகள்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. 

இந்நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனிடமிருந்து கை பற்றிய லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டது. இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட 4 பிராந்தியங்களையும் ரஷியாவிடம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வரும் நிலையில், ரஷிய ராணுவம் போரில் தற்போது வேகமாக முன்னேறி உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய பகுதிகளை கைப்பற்றி வருகிறது.

குறிப்பாக உக்ரைனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷ்யா படைகள் தற்பொழுது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் முக்கிய நகரங்களில் மின்தடை ஏற்பட்டு மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian troops advancing rapidly in the war


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->