ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி பிறந்த தினம்.!! - Seithipunal
Seithipunal


சடாகோ சசாகி : 

ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி 1943ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார்.

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோசிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதால், குருதிப்புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

சசாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது அவருடைய தோழி ஒரு தங்கநிற தாளினை சதுரமாக வெட்டி, அதை காகித கொக்காக மடித்து, யாரேனும் ஆயிரம் கொக்குகளை மடித்தால் அவரின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் என்னும் பண்டைய ஜப்பானிய கதையின் நம்பிக்கையை கூறினார்.

அதற்கேற்ப அவளும் 1000 கொக்குகளை மடிக்கத் தொடங்கினாள். இறப்பதற்கு முன்புவரை 644 கொக்குகளை மடித்திருந்தார், பின் எஞ்சிய கொக்குகள் அவரின் நண்பர்களால் மடிக்கப்பட்டு அவரின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.

ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இன்றுவரை அறியப்படும் சசாகி தன்னுடைய 12வது வயதில், 1955ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sadako sasaki birthday 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->