பாகிஸ்தானில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய சவுதி அரேபியா முடிவு - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் பன்னாட்டு சந்தைகளின் சரிவு மற்றும் பணவீக்கம் காரணமாக பொருளாதாரத்தில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் உலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் நட்பு நாடுகளிடமிருந்து 4 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவி கிடைக்கப் போவதாக பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் பின் பர்ஹான் பின் அப்துல்லாவுக்கும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கும் நடந்த தொலைபேசி அழைப்பின் போது சவுதி அரேபியா பாகிஸ்தானில் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் 2 பில்லியன் டாலர்கள் கத்தாரிடமிருந்தும், 1 பில்லியன் டாலர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்தும் முதலீடுகள் கிடைக்கும் என்றும் பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saudi Arabia to invest 1 billion dollor in Pakistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->