ஷகிப் அல் ஹசனை கைது செய்ய உத்தரவு!  - Seithipunal
Seithipunal


வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் ஆட்சியில் அவரது கட்சி எம்.பி.யான ஷகிப் அல் ஹசன், வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்ற பிறகு, நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, தாயகம் திரும்பாமல் உள்ளார்.

இதையடுத்து கடந்த ஆண்டு ஆக., மாதம் முதல் அவர் பல்வேறு நாடுகளுக்கு சென்று தங்கி வருகிறார். மேலும் தற்போது, அவர் இங்கிலாந்தில் உள்ள கவுன்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தநிலையில் அங்கும், பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கி, அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக வங்கதேச கோர்ட் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. 3 லட்சம் டாலர் மதிப்பிலான வங்கி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஜன.,19ம் தேதிக்குள் ஆஜராகுமாறு கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் ஷகிப் அல் ஹசன் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவரை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்காளதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shakib Al Hasan ordered to be arrested 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->