நேருக்கு நேர் : ரஷ்யா அதிபரை சந்திக்கும் பிரதமர் மோடி..!
Shanghai Cooperation Organization Conference
உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி தனி விமானத்தில் டெல்லியில் இருந்து நேற்று (வியாழக்கிழமை) உஸ்பெஸ்கிஸ்தான் சென்றடைந்தார். இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, ரஷிய அதிபருக்கும், இந்திய பிரதமருக்கும் இடையே சந்திப்பு நடைபெறவுள்ளது. உக்ரைனில் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கிய பிறகு, பிரதமர் மோடி மற்றும் புதின் முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்கள், ஆசிய பசிபிக் பிராந்திய நிலவரம், ஐ.நா. சபை மற்றும் ஜி 20 நாடுகள் அமைப்பில் இருநாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
English Summary
Shanghai Cooperation Organization Conference