வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து: 11 பேர் பலி! - Seithipunal
Seithipunal


கராச்சியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பாகிஸ்தான், கராச்சி ஆர்.ஜே வணிக வளாகத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வணிக வளாகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வணிக வளாகத்தில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் மீட்பு குழுவினர் சுமார் 30 பேரை இதுவரை வெளியேற்றியுள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகவும் 22 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர்  வணிக வளாகத்தில் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shopping mall Sudden fire accident 11 people died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->