போதைப்பொருள் கடத்தல் வழக்கு - தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 2 பேருக்கு தூக்கு தண்டனை.!!  - Seithipunal
Seithipunal


போதைப்பொருள் கடத்தல் வழக்கு - தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 2 பேருக்கு தூக்கு தண்டனை.!! 

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக உலக அளவில் கடுமையான சட்டங்களை கொண்டுள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாக திகழ்கிறது. அந்நாட்டில் சுமார் 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 

இதற்கு சர்வதேச அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் இந்த எதிர்ப்புகளை மீறி சிங்கப்பூர் அரசு மரண தண்டனைகளை நிறைவேற்றி வருகிறது.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தங்கராஜு சுப்பையா என்பவருக்கு கஞ்சா கடத்தல் வழக்குத் தொடர்பாக சிங்கப்பூர் அரசு தூக்கு தண்டனை வழங்கியது.

இந்த வழக்கில் தங்கராஜிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றாலும் கடத்தலை செல்போன் மூலம் ஒருங்கிணைத்ததாகக் கூறி அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மற்றொரு நபரை சிங்கப்பூர் அரசு நேற்று தூக்கிலிட்டது. 

இந்த நபர் தனக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நபர் நேற்று தூக்கிலிடப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

singapoore govt death penalty to two peoples for drugs kidnape


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->