விமான பயணிகளுக்கு அதிரடி!!! புதுய கட்டுப்பாடுகள் விதித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ....!
Singapore Airlines imposes power bank restrictions for air passengers
ஏர் பூசன் விமான நிறுவனமான தென்கொரியாவிற்கு சொந்தமான விமானம் சமீபத்தில் தீப்பிடித்து எரிந்தது . இதில் நல்ல விஷயமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இருப்பினும், அந்த விமானம் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்தது. இதனையடுத்து ஏர் பூசன் நிறுவனம், விமான பயணிகளின் பாதுகாப்பு காரணம் கருதி செல்போன் சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதித்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து ஈவா ஏர்லைன்ஸ் நிறுவனமான தைவான் நாட்டு விமான நிலையம் இந்த உத்தரவை அமல்படுத்தியது.அந்தவரிசையில் தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. இது குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் :
அதில் கூறியதாவது," 100 வாட் திறன் வரை கொண்ட பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்லலாம். ஆனால் தங்களுடன் கொண்டு செல்லும் கைப்பையில் அதனை கொண்டு செல்லக்கூடாது" என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இதை மக்கள் பலரும் புரிந்துகொண்டு அதன்படி செயல்பட்டு வருகின்றனர்.
English Summary
Singapore Airlines imposes power bank restrictions for air passengers