அமெரிக்கா : கலிபோர்னியாவை கதறவிடும் பனிப்புயல் - 16 பேர் உயிரிழப்பு.!  - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் கடந்த மாதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பனிப்புயல் தாக்கியது. இந்தபி பனித் தாக்குதலில் நியூயார்க் மற்றும் கலிபோர்னியா உள்ளிட்ட சுமார் 10-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கபட்டன. இந்த பனிப்புயல் தாக்குதலில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இதில், மற்ற மாகாணங்களில் பனிப்புயலின் தாக்கம் குறைந்திருந்தாலும், கலிபோர்னியா மாகாணத்தில் தொடர்ந்து பனிப்புயல்கள் தாக்கம் அதிகரித்து வருகின்றன. மேலும் அந்த பகுதியில், வரலாறு காணாத அளவுக்கு கனமழையும் பெய்து வருவதனால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக மாறி உள்ளன. 

இந்நிலையில் நேற்று முன்தினம் கலிபோர்னியா மாகாணத்தில் மீண்டும் கடுமையான பனிப்புயல் தாக்கியது. இதைத் தொடர்ந்து அங்கு கனமழையும் கொட்டித்தீர்த்ததனால் சான்பிரான்சிஸ்கோ உள்பட பல நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதனால் அப்பகுதியில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. இதுவரை பனிப்புயல் காரணமாக 16 பேர் பலியானதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sixteen peoples died in caliporniya winter storms


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->