பாலஸ்தீனத்திற்கு தென்னாப்பிரிக்கா ஆதரவு!!
South Africa supports Palestine
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த பத்து நாட்களுக்கு மேலாக முன் உள்ள போர் மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் நிலவி வருகிறது.
இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து காசா பகுதிகள் மீதும், பாலஸ்தீனத்தின மீதும், தெற்கு லெபனானின் மீதும் வான்வழி மற்றும் தரை வழியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில் இந்தப் போரை நிறுத்த உலக நாடுகள் முன் வர வேண்டும் என பாலஸ்தீனம் அழைப்பு விடுத்தது. இஸ்லாமிய நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தங்கள் நிலைபாட்டை அறிவித்து இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்தியா தனது ஆதரவை இஸ்ரேல் பக்கம் காட்டியது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "பாலஸ்தீன மக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம் என்று உறுதி அளிக்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
South Africa supports Palestine