தொடர் போராட்டத்தால் அனைத்து ரயில்களும் ரத்து! இலங்கை ரயில்வே துறை.! - Seithipunal
Seithipunal


தொடரும் போராட்டத்தால் அனைத்து ரயில் சேவையும் ரத்து செய்வதாக இலங்கை ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது இதனால் எரி பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் அவற்றின் விலையும் விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை கண்டித்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டுமென தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.

இன்று தலைநகர் கொழும்புவில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை சம்பவம் அரங்கேறியது. இந்த கலவரத்தைத் தொடர்ந்து இலங்கை பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து இலங்கையில் பல்வேறு இடங்களில் தொடர் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படும் என்று இலங்கை ரயில்வே துறை பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka cancels all trains due to violence


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->