ராணுவ வீரர்களின் கொடூரம்; ஓராண்டில் 200 குழந்தைகள் சீரழிப்பு; சூடானில் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில், கடந்த 2023 ஏப்ரல் மாதம் அந்நாட்டு ராணுவத்திற்கும், துணை ராணுவப்படையான ஆர்.எஸ்.எப்.,க்கும் இடையே மோதல் வெடித்தது. அதன்காரணமாக அங்கு கடந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு முதல் மோதல் அதிகரித்துள்ளது.  

இந்த கலவரத்தில், 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 14 லட்சம் மக்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு, வெரட்டப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புக்காக பிற மாநிலங்களுக்கு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டில்,  2024-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, 200 மேற்பட்ட குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

'யுனிசெப்' ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகளின் அவசர கால நிதியம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது; 

'கடந்த 2024-க்கு பின், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப்படையினரால், பொதுமக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்களிடம் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, 221 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 30 சதவீதம் பேர் சிறுவர்கள். அவர்களில், 16 வயது முதல், 4 - 5 வயது சிறுவர்களும் அடக்கம்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த குறிப்பில், 'இருதரப்பு வீரர்களின் அட்டூழியங்கள் அதிகரித்து விட்டன. பாலியல் வன்முறைகள், கட்டாய குழந்தை திருமணம் போன்றவற்றால் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அட்டூழியங்களால், 61,800 குழந்தைகள், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளனர்.' என்று 'யுனிசெப்' அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குநர் காதரின் ரஸ்ஸல் கூறுகையில், ''பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பாலியல் வன்முறைகள், போரின் ஒரு தந்திரமாக சூடானில் பின்பற்றப்படுகிறது. இதன் வாயிலாக, போரின் போது குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்ற சர்வதேச சட்டங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன,'' என்று வேதனை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sudanese soldiers sexually abused 200 children in one year


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->