சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய தடை! மீறினால் அபராதம்! - Seithipunal
Seithipunal


ஐரோப்பியா, சுவிட்சர்லாந்து நாட்டில் பெண்கள் முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளை பொதுவெளிகளில் அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. 

சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் இந்தச் சட்டம் 151-29 என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது ஏற்கனவே மேலவையால் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சட்டம் அமலுக்கு வந்தால் பெண்கள் பொது இடங்களான உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், போக்குவரத்து சாலைகள் போன்ற அனைத்து இடங்களிலும் புர்கா அணிய தடை விதிக்கப்படும். 

இருப்பினும் மத வழிபாட்டு தலங்களில் இதற்கு தடை விதிக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறுபவர்களுக்கு சுவிட்சர்லாந்தின் 1000 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Switzerland women burqa ban


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->