சீனாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க தயார் - தைவான் அதிபர்
Taiwan president says we ready to give correct action
தைவான் மீது சீனா போர் தொடுக்க கூடும் என்ற நிலையில் சீனாவின் கடும் எதிா்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி வருகை தந்து அதிபரை சந்தித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தைவானை சுற்றி சீனா போா்ப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
மேலும் தைவான் கடல் பகுதியில் சீனா மேற்கொண்ட போா்ப் பயிற்சியின்போது, எல்லைக் கோட்டை சீனாவின் நாட்டு போா்க் கப்பல்களும், போா் விமானங்களும் பல முறை கடந்து தைவான் எல்லைக்குள் நுழைந்தன.
இந்நிலையில் தைவான் பகுதியில் பதற்றத்தைக் தடுக்க சர்வதேச நாடுகள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று தைவான் அதிபர் சாய் இங் வென் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து தைவான் அரசும், ராணுவமும் சீனாவின் நடவடிக்கையை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தேவைப்பட்டால் சீனாவின் போர் நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
English Summary
Taiwan president says we ready to give correct action