உக்ரைன்-ரஷ்யா போருக்கு நடுவே போடப்பட்ட கருக்கடல் ஒப்பந்தம்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன்-ரஷ்யா இடையே நடக்கும் போர்க் காரணமாக கருங்கடல் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வர்த்தகம் தடைபட்டது. இதனால் கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கு உலக அளவில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.

இது குறித்து ஐ.நா பொதுச் செயலா் அண்டோனியா குத்தரெஸ், உக்ரைன்-ரஷ்யா இடையே பல முறை பேச்சுவாா்த்தை நடத்தினார். பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கருங்கடல் பகுதியில் வர்த்தகம் தொடர்பாக உக்ரைன்-ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. 

இந்த ஒப்பந்தத்தில், கருங்கடல் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ள வா்த்தக வழித்தடங்களை திறக்கவும், உணவுப் பொருள் பற்றாக்குறையில் இருந்து உலக நாடுகளைப் பாதுகாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ரஷ்ய நாட்டின் அதிபர் புதின் ஈரானுக்கு பயணம் சென்ற‌ போது, கருக்கடல் வர்த்தகத்தடை பேச்சுவார்த்தைக்கு உதவிய துருக்கி அதிபர் எர்டோகனை சந்தித்து தனது பாராட்டினை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Black Sea agreement Ukraine Russia war


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->