குகைக்குள் சிக்கிய சிறுவர்கள்.,உயிரை காக்க தன் உயிரை தியாகம் செய்த நீர்மூழ்கி வீரர்., - Seithipunal
Seithipunal


தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 14  சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது நீர்மூழ்கி வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
தாய்லாந்து நாட்டின் மாசே நகரில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது.  10 கிமீ நீளம் உடைய இந்த குகையில் கால்பந்து அணியை சேர்ந்த வீரர்கள் 12 சிறுவர்கள் பயிற்சியாளர் ஒருவர் மலையின் காரணமாக  சென்றுள்ளனர்.  

1 submarine dead to save 13 children trapped in cave tyailand க்கான பட முடிவு
 
மேலும் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து அவர்களால் குகையைவிட்டு வெளியேற முடியவில்லை. குகைப் பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. இவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 

பின் 10 நாட்களுக்கு பிறகு குகையில் சிக்கி கொண்டிருந்த 13 பேரும்   கண்டுபிடிக்கப்பட்டனர் .பின் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

மேலும் சிறுவர்களை மீட்க சில மாதங்கள் ஆகும் என்று தாய்லாந்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

13 children trapped in cave thailand க்கான பட முடிவு

இந்நிலையில் தாய்லாந்து கடற்படையின் நீர்மூழ்கி வீரராக பணியாற்றிய சமன் குணன், சிறுவர்களை மீட்கும் பணிக்கு உதவி செய்ய  தானாக முன்வந்து இணைந்துள்ளார். 

அப்பொழுது குகைக்குள் சென்று சிறுவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை ஒப்படைத்த குணன், இன்று அதிகாலை நீருக்குள் மூழ்கி நீந்தியபடி குகையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதியில் உள்ள முகாமிற்கு திரும்பினார். 

13 children trapped in cave thailand க்கான பட முடிவு

ஆனால், வழியிலேயே அவரது ஆக்சிஜன் சிலிண்டரில் ஆக்சிஜன் குறையத் தொடங்கியதால் மூச்சுத்திணறி இறந்துள்ளார். நீர்மூழ்கி வீரரின் மரணம் மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The submarine sacrificed his life to save the Children trapped in the cave


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->