பொது கழிவறையை பயன்படுத்த திருநங்கைகளுக்குத் தடை - எங்குத் தெரியுமா?
third generation not use public toilet in america
அமெரிக்காவில் உள்ள தெற்கு டகோட்டா மாகாணத்தில் ஜூலை ஒன்று முதல் பள்ளிகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களில் திருநங்கைகள் பொது கழிப்பறையை பயன்படுத்துவதைத் தடுக்கும் புதிய சட்டம் அமலுக்கு வர உள்ளது.
அமெரிக்காவில் ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. திருநங்கைகளின் உரிமைகளைக் குறைக்கும் நோக்கில் தொடர்ச்சியான நிர்வாக உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டு வருகிறார்.
அந்தவகையில் தெற்கு டகோட்டா மாகாணத்தில் திருநங்கைகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த தடையானது வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அம்மாகாண ஆளுநர் லாரி ரோடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்த தடையை பிறப்பிக்கும் 13-வது மாகாணம் இதுவாகும். இதற்கு முன்னதாக டென்னசி, மொன்டானா மாகாணத்திலும் இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
third generation not use public toilet in america